என்னைப் பார்த்ததால்
நானும் உன்
வேல் விழியை
சற்றே உற்றுப் பார்த்தேன்
ஆனால்...
மறுகணமே - நீ
என்னைச் சுட்டுவிடும்
பார்வையால்
திரும்பிப் பார்த்த
பார்வை இருக்கே...
படை கொண்டு
என்னைத்
தாக்குவது போல்
படு பயங்கரமானது
காதல் - 2
குறள் - 1082
குறள் - 1082
" நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து "
தானைக்கொண் டன்ன துடைத்து "

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக