ஞாயிறு, 17 அக்டோபர், 2010

கொல்லும் விழி

நான் யமனை 

முன்பு கண்டறியேன் 

ஆனாலும் 

இப்போது உன்னைக் 

கண்டபின்தான் 

தெரிகிறது 

அது பெண்மையுடன் 

ஆளைக் கொள்ளும் 

இரு வாள் விழியைக் 

கொண்டதென்று...

காதல் - 3
குறள் 1083

"பண்டறியேன் கூற்று என்பதனை இனியறிந்தேன் 
பெண்டகையால் பேரமர்க் கட்கு"

புதன், 13 அக்டோபர், 2010

சுட்டுவிழிப் பார்வை

ஏய் பெண்ணே நீ 


என்னைப் பார்த்ததால் 


நானும் உன் 


வேல் விழியை 


சற்றே உற்றுப் பார்த்தேன் 


ஆனால்...


மறுகணமே - நீ 


என்னைச் சுட்டுவிடும் 


பார்வையால் 


திரும்பிப் பார்த்த 


பார்வை இருக்கே...


படை கொண்டு 


என்னைத் 


தாக்குவது போல் 


படு பயங்கரமானது 



காதல் - 2
குறள் 1082




" நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து " 



திங்கள், 11 அக்டோபர், 2010

நீயார் பெண்ணே !


பரம் சுமந்த
காதணி உடையவளே
நீ
தெய்வப் பெண்ணோ
மயிலோ
உன்னைப் பார்த்தவுடன்
என் நெஞ்சு
மயங்குதே நீயார்
பெண்ணே

காதல் -1
குறள் -1081